மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

ஹாக்கி: புதிய நிர்வாகிகள் நியமனம்!

ஹாக்கி: புதிய நிர்வாகிகள் நியமனம்!

இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகக் கூட்டமைப்பின் புதிய தலைவராக மொஹத் முஸ்தேக் அஹ்மத் நியமிக்கப்பட்டுளார்.

1928ஆம் ஆண்டு தேசிய ஹாக்கி கூட்டமைப்பு குவாலியரில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (AHF) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பிளவு எற்பட்டு, அதிலிருந்து தேசிய ஹாக்கி கூட்டமைப்பு நீக்கப்பட்டது. அதன்பின்னர், 2011ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதியன்று தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் புதிய இந்திய ஹாக்கி அணியின் நிர்வாக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக இருந்த ரஜீந்தர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 8ஆவது இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகக் கூட்டமைப்பின் தலைவர் தேர்தல் டெல்லியில் இன்று (அக்டோபர் 1) நடைபெற்றது.

இத்தேர்தலில் ஹாக்கி அணியின் செயலாளராக இருந்த மொஹத் முஸ்தேக் அஹ்மத் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தலைவர் பதவி வகித்து வந்த ரஜீந்தர் சிங் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் ஹாக்கி அணியின் கியானென்டிரோ நிங்கோம்பம் மூத்த துணைத் தலைவராகவும், ஜம்மு-காஷ்மீர் மாநில ஹாக்கி அணியின் ஆசீமா அலி மற்றும் ஜார்கண்ட் மாநில ஹாக்கி அணியின் போலாநாத் சிங் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் ஹாக்கி அணியின் தாபன் குமார் தாஸ் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் அனுஷ்டா லக்ரா, சத்தீஸ்கர் ஹாக்கி அணியின் கேப்டன் ஃபெரோஸ் அன்சாரி ஆகியோர் இணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018