ஆழியாறு –சோலையாறு வழக்கு: மூன்று வாரகால அவகாசம்!


ஆழியாறு-சோலையாறு வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்த இடைக்கால உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்தது.
தமிழகம் – கேரளா இடையேயான நீர் பகிர்வு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில், ஆழியாறு அணையிலிருந்தும், சோலையாறு நீர்த்தேக்கத்திலிருந்தும் தமிழகம், கேரளாவுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி தொடர வேண்டுமா அல்லது வறட்சி காலங்களில் தண்ணீர் பகிர்வு மாற்றப்பட வேண்டுமா என்பது போன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கடந்த 1970ஆம் ஆண்டு நீர் பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆழியாறு அணையிலிருந்து 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு 12.3டிஎம்சி தண்ணீரும் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் கேரளத்துக்கு உரிய நீரை கொடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வறட்சி நிலவுவதாக காரணம் கூறி கேரள மாநிலத்துக்கு முழு நீரையும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு புகார் கூறியது. இந்நிலையில், இது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக மற்றும் கேரள வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே 1970ஆம் ஆண்டு ஒப்பந்தபடி கேரளத்துக்கான நீரை கொடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தது.