மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

வெரைட்டி காட்டும் அதிதி

வெரைட்டி காட்டும் அதிதி

பாலிவுட்டில் பரபரப்பாக வலம் வந்த அதிதி ராவ் ஹைதரி தற்போது தென்னிந்தியத் திரையுலகில் செட்டில் ஆகிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்ற அதிதி ராவ் மீண்டும் அவரது இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். தற்போது திரையரங்கில் ஓடிவரும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். அதைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து புதிய இருமொழிப் படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழைப்போலவே தெலுங்கிலும் தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். சம்மோஹனம் படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர் தற்போது தேசியவிருது பெற்ற சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் அண்டரிக்‌ஷம் படத்தில் நடிக்கிறார். வருண் தேஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வரலாற்றுக் கதைகள், காதல், க்ரைம் த்ரில்லர், சைக்கோ த்ரில்லர், ஸ்பேஸ் டிராமா என தொடர்ந்து தான் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகளில் அதிதி வித்தியாசம் காட்டிவருகிறார். அந்தந்த கதாபாத்திரங்களுக்கே உரிய நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துவதால் தென்னிந்தியத் திரையுலகில் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் அவரை நோக்கி வருகின்றன.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018