மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

தீர்ப்புகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!

தீர்ப்புகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் (அக்டோபர் 01) பதவி ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்வு பெறும் விழாவில் பேசிய புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என புகழ்ந்துள்ளார்.

நாட்டின் 45ஆவது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா 1953ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து தனது பணியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா 1997ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய மிஸ்ரா, 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். இதைதொடர்ந்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றார். இவர் இன்று(அக்டோபர் 01) ஓய்வு பெறுகிறார்.

ஆதார், அரசியல் சாசனப்படி செல்லும், தன்பாலின உறவுக்கு அனுமதி, திருமணத்துக்குப் பிறகு தவறான உறவு கிரிமினல் குற்றமாகாது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி உள்ளிட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் இவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்டன.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon