மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

இது வர ஒடச்சதெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

இது வர ஒடச்சதெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

இவங்க பாட்டுக்கு கூட்டத்தை நடத்தி ‘அவர்களே இவர்களே’ன்னு பேசிட்டு போயிடுறாங்க. அதைப் பார்த்துட்டு எல்லாரும் லைன்ல வந்து திட்டுறாங்க. அவங்களுக்கு என்ன கேக்கவா போகுது, நாமதான் பேஸ்புக் வாசல்ல தலை வச்சு படுத்துருக்கோம். அதனால எல்லாத்தையும் பார்க்க வேண்டியதா இருக்கு. ஒண்ணும் இல்ல பிடல்காஸ்ட்ரோவும், சேகுவேராவும் கால்ல விழுந்தா பதவி வாங்குனாங்கன்னு கேட்குறாங்க. இதுக்கு என்ன பதில் சொல்ல. இருக்குற ஏர்போர்ட்டையே பசையை தடவி ஒட்டிகிட்டு இருக்குறாங்க, இதுல இன்னொன்னு வரப்போகுதாம். பரவாயில்லையேன்னு சந்தோஷமா இருக்குதுல்ல. ஆங் அப்படி ஆச்சர்யப்படுறவங்களுக்கு தான் இன்னொரு மேட்டரும் இருக்குதாம். ஹைட்ரோ கார்பன் எடுக்க ஸ்டெர்லைட் கம்பெனியை நடத்துற வேதாந்தாவே வருதாம் எப்பூடி.. குண்டடி வாங்க தயாராகிட்டே அப்டேட்டை பாருங்க.

@VigneshWaran

மதுரை எம்.ஜி.ர் பஸ் ஸ்டாண்டுல எம்.ஜி.ர் பஸ் ஏறி எம்.ஜி.ர் கண்டக்டர் கிட்ட எம்.ஜி.ர் டிக்கெட் வாங்கி சென்னைல இருக்குற எம்.ஜி.ர் பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குவோம் பாருங்க..ஒரே எம்.ஜி.ரா இருக்கும்..

@sultan_Twitz

சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

அங்கயாவது மேற்கூரை கண்ணாடி அடிக்கடி கீழ விழாம இருக்குமா!?

@gips_twitz

ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்

எதுக்கு உருட்டிகிட்டு பாகிஸ்தான் நாட்டு சதி ன்னு சொல்லுங்க...

@ajmalnks

சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் - எடப்பாடி

முதல்ல எல்லா பேருந்து நிலையத்திலயும் கக்கூஸை ஒழுங்கா அமைங்கய்யா...அப்புறமா அங்கே போகலாம்.-சாமானியன்

@yugarajesh2

இந்தியா விரைவில் இங்கிலாந்து பொருளாதாரத்தை மிஞ்சும்-மோடி

- ஏன்?..விஜய்மல்லையா, நீரவ் மோடிக்கிட்ட இந்திய பொருளாதாரத்தை ஒப்படைக்கப்போறிங்களா...??

@yugarajesh2

ஸ்டாலினால் அதிமுகவை ஜெயிக்க முடியாது- ஜெயக்குமார்

-அட..!!.இனி அதிமுகவாலேயே ஜெயிக்க முடியாது..?

@Akku_Twitz

சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் தமிழக முதல்வரும் துணைமுதல்வரும்! - அமைச்சர்

ஜெயக்குமார்

சேகுவேரா எப்ப சசிகலா கால்ல விழுந்தாரு, ஃபிடல் காஸ்ட்ரோ எப்போ மிச்சர் மட்டும் சாப்டுகிட்டு இருந்தாரு

@shivaas_twitz

சிட்டி குழந்தைகள், மாட்டைக் கூட 'டைனோசரை' பார்ப்பது போல ஆச்சர்யமாய் பாக்குதுங்க..!

@vickytalkz

சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

- இது வர ஒடச்சதெல்லாம் பத்தாதா..?

@rahimgazali

எம்ஜிஆர் பொன்மொழிகள்ன்னு புத்தகம் வெளியிட்டாங்க. சினிமாவில் அந்த பொன்மொழிகளை எழுதிக்கொடுத்த வசனகர்த்தா பெயர்களும் அந்த புத்தகத்தில் இடம்பெறுமா?

@mohanramko

100 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்காத இடமாக டாஸ்மாக் இருந்தது. இனி பெட்ரோல் பங்க் இருக்கும் போல....

@Thaadikkaran

ஒருவர் சொல்லும் ரகசியங்களை முதலில் வெளியிடும் நபர்களும் தமிழ் ராக்கர்ஸே..!

@mohanramko

'பின்னாடி பார்த்துக்கலாம்'னு இருக்காதீங்க.........

முன்னாடி பார்த்து வாகனத்தை ஓட்டலைனா, விபத்து ஏற்படும் சாலையில்...

@rahimgazali

சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் ஈ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் - அமைச்சர் ஜெயக்குமார் #

ஹிட்லர், முசோலினின்னு சொல்ல வந்து டங்க் ஸ்லிப்பாகிடுச்சு போல

@Thaadikkaran

ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்

- வெளிநாட்டுல எடிட் பண்ண இது என்ன சங்கர் படமா சார்..!!

@Suyanalavaathi

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் - எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பெயர மாத்துனாலும் டாய்லெட் கதவ மாத்த மாடீங்களே !!

@shivaas_twitz

'இப்படியே போயிடுமா வாழ்க்கை'ங்கிறது போய்...

'இப்படியேவாவது போகுமா வாழ்க்கை'னு ஏங்க வச்சிடுது..!

@gips_twitz

மோகன் முரளிக்கு அடுத்து மைக் பாடகர்ன்னதும் நம் நினைவிற்கு வருவது அமைச்சர் ஜெயக்குமார் தான்

@amuduarattai

மழையின் அளவை குறைத்தது போல, இப்பொழுது, மலைகளின் அளவையும் குறைக்க ஆரம்பித்து விட்டோம்.

@ajmalnks

ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்

மோடி எடிட் பண்ணி கொண்டு வந்திருப்பார் போல.

@yugarajesh2

மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி-தமிழிசை

- நீங்க எதை சொன்னாலுமே எங்களுக்கு 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' வசனம் மாதிரியே தான் கேட்குது...!!!

-லாக் ஆஃப்

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018