மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வாட்ஸ் அப் சாட்டிங்: மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை!

வாட்ஸ் அப் சாட்டிங்: மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை!

வாட்ஸ் ஆப்பில் எப்போதும் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த கணவரை, மனைவி திட்டியதால் அவரும் அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கிழக்கு மாரட்பள்ளியில் எலக்ட்ரீஷியனாக சிவக்குமார் வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சிவக்குமார் எப்போதும் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து மெசேஜ் செய்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால், மனைவிக்கு கோபம். அதன்பிறகு, இந்த கோபமானது இருவருக்கும் இடையே சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டையாக மாறியுள்ளது. ஒருநாள் சிவக்குமாரின் ஃபோனை சோதனை செய்துள்ளார் மனைவி. அப்போது வெண்ணிலா என்ற பெண்ணுடன் சிவக்குமார் அதிகமாக மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. வெண்ணிலாவும், சிவக்குமாரும் பால்ய வயது நண்பர்களாம். இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே தகராறு முற்றியுள்ளது.

இதனால் மன உளைச்சலடைந்த சிவக்குமார் செப்டம்பர் 29ஆம் தேதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது தோழி வெண்ணிலாவும் பூச்சி மருந்தைக் குடித்துள்ளார். அவரை அவர் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 30) இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon