மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டுச் சொத்துகளை அமலாக்கத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்து நாட்டை விட்டே தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவர அமலாக்கத் துறையினரும், வருமான வரித் துறையினரும் முயன்று வருகின்றனர். மறுபுறம் நீரவ் மோடியின் சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் அமலாக்கத் துறை இறங்கியுள்ளது. அதன்படி, ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துகளை அக்டோபர் 1ஆம் தேதி அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. நிதி மோசடித் தடுப்புச் சட்டம் பிரிவு-5இன் கீழ் இந்தச் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நீரவ் மோடிக்குச் சொந்தமாக இருந்த ரூ.216 கோடி (29.99 மில்லியன் டாலர்) மதிப்பிலான இரண்டு அசையாச் சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர நீரவ் மோடிக்குச் சொந்தமான ஐந்து வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.278 கோடி டெபாசிட் தொகை இருந்துள்ளது. மும்பையில் இருந்த ரூ.19.50 கோடி மதிப்பிலான நீரவ் மோடியின் வீடும் இப்போது அமலாக்கத் துறையின் வசம் சென்றுவிட்டது. ஹாங்காங்கில் இருந்த நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.22.69 கோடி மதிப்பிலான வைர நகைகளும் கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேற்கூறிய விவரங்களை அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018