மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கழிப்பறை வசதி: தேர்தலில் போட்டியிட இயலாது!

கழிப்பறை வசதி: தேர்தலில் போட்டியிட இயலாது!

வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநிலத்தின் உள்ளாட்சி துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே கூறியதாவது: “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டாயம் இருக்க வேண்டும். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்துள்ளோம்.

மேலும், 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பது பற்றிய பரிசீலனையும் செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon