மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

விளம்பரம்

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் நுழைந்துகொண்டிருந்த சுற்றுலாத் துறையின் மிகப்பெரும் நிர்வாகிகளை அழைத்து அமர வைத்துக்கொண்டிருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

பல நாடுகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சாதனைகள் புரிந்த பல்வேறு சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அந்த அரங்கில் காணப்பட்டனர். 2000க்கும் மேற்பட்ட சுற்றுலாத் துறையின் ஜாம்பாவான்களை ஒரே இடத்தில் சேர்த்து, பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கும் சூழலை உருவாக்கிக்கொடுத்த தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் அமைப்பின் நிர்வாகிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றிகளைச் சொல்லி விழாவைத் தொடங்கினார்கள்.

சுற்றுலா என்பது எப்போதுமே பயணப்படுதலில் மட்டுமாக நிகழ்வதில்லை. அந்த பயணத்தினூடே சேர்த்து எந்தளவுக்கு அந்நாட்டின் வரலாற்று விழுமியங்கள் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதில்தான் அந்தப் பயணத்தின் அனுபவம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் அருமை பெறுமைகளை விழாவுக்கு வந்தவர்களுக்கு சொல்வதற்கான நிகழ்வுகளும் காமராஜர் அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது.

‘கிருபானந்தவாணி’ என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பேச்சாளர் தேச.மங்கையர்க்கரசி, சுற்றுலா பற்றிய இலக்கிய தொகுப்பை வாசிக்க பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் பாரதி திருமுருகன் சுற்றுலாவை மையமாக வைத்து பாடல்களைப் பாட; ஞானசம்பந்தம் குழுவினர் நடத்திய பட்டிமன்றத்துடன், இசையமைப்பாளர் பரத்வாஜ் உருவாக்கிய திருக்குறள் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்காக இசைக்கப்பட்டது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கானா பாடல்களும் கானா விஜி மூலம் அம்மேடையில் ஒலிக்கவைக்கப்பட்டன.

இத்தனை பெருமைகளோடு நடைபெற்ற அவ்விழாவில், ஆசியாவில் சிறப்பான விமான சேவையை வழங்கிவரும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஆசிய கண்டத்துக்கு வருபவர்களின் சிறந்த தேர்வாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இருப்பதைக் குறிப்பிட்டு பலர் பாராட்டியது கிரீடத்தில் வைக்கப்படவேண்டிய பாராட்டு. தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னைக்கு வந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாகத்தான் என்பதால், அந்த மேடையில் சொல்லப்பட்ட அத்தனை கூற்றுகளையும் ஏற்று கைதட்டி வாழ்த்தினார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மூன்று வருடங்களாக ஆசிய கண்டத்தின் சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏற்படும் போட்டிகளுக்காக சேவை தரத்திலும், அவற்றை கொடுக்கும் விதத்திலும் எவ்வித சமரசமும் செய்யாமல் பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதே முதல் குறிக்கோள் என இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அடுத்த வருடமும் இந்த விருதினை வெல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

விளம்பர பகுதி

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon