மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 20 பிப் 2020

சிலேட் விற்கும் கூகுள்!

சிலேட் விற்கும் கூகுள்!

‘ஒரு காலத்தில் நாங்கள் இதில்தான் எழுதினோம்’ என பரண் மேல் கிடக்கும் சிலேட்டை, பெரியவர்கள் எடுத்துக் காண்பித்தால்... நாங்களும் அதில்தான் எழுதுகிறோம் என Tab வகையறாக்களை எடுத்துக் காட்டுகின்றனர் குழந்தைகள். விளையாட்டாகச் சொன்னாலும் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் பயனை தனதாக்கிக்கொள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் முயற்சி செய்யும்போது, கூகுள் மட்டும் விட்டுவிடுமா?

அக்டோபர் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறவிருக்கும் ‘பிக்சல் 3’ எனும் விழாவில், தங்களது புதிய பொருட்களை அறிமுகப்படுத்தப் போகிறது கூகுள். எந்த மாதிரியான பொருள்களை கூகுள் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற ஆர்வத்துடன் மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்களை அயர்ச்சி அடைய வைக்கும் விதத்தில், அத்தனைப் பொருட்கள் பற்றிய தகவலும் கசிந்துவிட்டது.

கடைசியாக, கூகுள் அறிமுகப்படுத்தப்போகும் ‘கூகுள் சிலேட்’ பற்றிய படங்களும் வெளியாகிவிட்டன. கூகுளின் நீண்ட நாள் பணியாக இருந்துவரும் கூகுள் சிலேட், டேப் மாடலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. டச் ஸ்கிரீன் உதவியுடன் மட்டுமே உருவாகி மார்க்கெட்டுக்கு வந்த டேப் டிவைஸ்களின் புதிய அடையாளமாக, கூகுள் சிலேட்டில் கீ-போர்டு மற்றும் டிராக்பேட் ஆகியவை இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திங்கள், 8 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon