மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 23 செப் 2019

இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சிறப்பு அதிரடிப் படையினரின் 26ஆவது ஆண்டுவிழா நேற்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் மொத்தமாக வேரறுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையால் 126 மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது 10-12 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 131 மாவோயிஸ்ட்டுகளை சிஆர்பிஎஃப் படைகள் சுட்டுக்கொன்றுள்ளன. 1,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 58 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆதரவாக சிஆர்பிஎஃப் இருக்கிறார்கள் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவில் ஒரு "பிரிக்க முடியாத பகுதியாக" இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் சில இளைஞர்கள் பயங்கரவாத பாதைக்குத் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் இனி நடைபெறாமல் இருக்கப் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்வர். சிஆர்பிஃஎப் படையினரின் ஓர் அங்கமாக இருக்கும் ஆர்ஏஃஎப் வீரர்கள், அதிவிரைவாக செயல்பட வேண்டும். என்றும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளாதீர்கள் என்றும் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.

திங்கள், 8 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon