மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

இருசக்கர வாகன விற்பனை ஜோர்!

இருசக்கர வாகன விற்பனை ஜோர்!

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் இருசக்கர வாகனத் துறை 11.5 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இத்துறையினர் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 7,69,138 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்குச் சராசரியாக 25,637 இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே ஒரு மாதத்தில் 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை ஹீரோ மோட்டோ கார்ப் நிகழ்த்தியுள்ளது. 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 7,20,729 வாகனங்களை விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனையில் 17 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 4,30,939 இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இதில் உள்நாட்டில் 2,73,029 வாகனங்களும், வெளிநாடுகளில் (ஏற்றுமதி) 1,22,260 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை 3,50,854லிருந்து 4,10,696 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை 17 சதவிகிதமும், ஏற்றுமதி 16 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செப்டம்பரில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 71,662 ஆகும்.

சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை இருமடங்கு உயர்ந்து 72,134 ஆக உள்ளது. ஹோண்டா நிறுவனம் மட்டுமே 9 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது 2017 செப்டம்பரில் 6,01,998 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2018 செப்டம்பரில் 5,55,730 ஆகக் குறைந்துள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon