மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

கணவனைக் கைவிட்டு, காதலனுடன் சென்ற பெண்!

கணவனைக் கைவிட்டு, காதலனுடன் சென்ற பெண்!

திருமணமான பெண்ணைக் காதலனுடன் அனுப்பி வைத்ததாக, ஏர்வாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் நளாயினி. இவருக்கும் சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் என்பவருக்கும், 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 21ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டார் ஆனந்த பிரகாஷ். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில், கடந்த 7ஆம் தேதியில் இருந்து நளாயினியைக் காணவில்லை. இதுகுறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, நளாயினி தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் அழைத்து வந்த ஏர்வாடி போலீசார், நேற்று (அக்டோபர் 10) விசாரணை செய்தனர். கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்ததாகவும், பெண்ணின் பெற்றோருக்குத் தெரிந்ததால் அவசரமாக அவருக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. விசாரணையின் முடிவில், தனது காதலருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார் நளாயினி.

விரும்பியவருடன் வாழ நளாயினிக்கு உரிமை உண்டு என்று கூறினார் ஏர்வாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன். அவரது பதிலால் அதிர்ச்சியடைந்த நளாயினியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை உதவி ஆய்வாளர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சரவணன் மீது ஆனந்த பிரகாஷின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon