மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு!

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு!

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரிக் குறைப்பு மேற்கொண்ட இரண்டு தினங்களிலேயே பெட்ரோலியப் பொருட்களின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று (அக்டோபர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.82.48 ஆகவும், டீசல் விலை ரூ.78.51 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது பெட்ரோல் விலை 12 காசுகளும், டீசல் விலை 29 காசுகளும் உயர்ந்துள்ளது. இந்த மிகப் பெரிய விலையேற்றம் டெல்லி மட்டுமல்ல, மும்பை உள்ளிட்ட இதர நகரங்களும் அதிகமாகவே இருக்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.87.94 ஆகவும், டீசல் விலை ரூ.78.51 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்கும் முயற்சியில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு ரூ.2.50 குறைத்தது (மானியம் உட்பட). எனினும், அவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கலால் வரிக் குறைப்புக்குப் பயன் இல்லாமல் போயுள்ளது.

கலால் வரிக் குறைப்புக்குப் பிறகு, குஜராத், சத்தீஸ்கர், பிகார், உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு & காஷ்மீர், இமாசலப் பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், ஜார்கண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் புதிய விலைகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.73 ஆகவும், டீசல் விலை ரூ.79.29 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் பெட்ரோல் விலை ரூ.85.61 ஆகவும், டீசல் விலை ரூ.78.90 ஆக மட்டுமே இருந்தது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும் என்று வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon