மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

ஊட்டச்சத்துக் குறைபாடு: குழந்தைகளிடம் அதிகரிப்பு!

ஊட்டச்சத்துக் குறைபாடு: குழந்தைகளிடம் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் எடை குறைவாக உள்ள குழந்தைகள் விகிதம் 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 85 கோடியாக அதிகரித்துள்ளதாகப் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. உலக நாடுகளில் பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் வாடுவோர் பற்றி ஆய்வு செய்து, இந்த பட்டியலை வெளியிட்டது. 119 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. பசியால் வாடும் மக்களில் 4 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 சதவிகிதக் குழந்தைகள், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயரத்துக்கேற்ற எடையில்லாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000ஆவது ஆண்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் எடை குறைவாக உள்ள குழந்தைகள் விகிதம் 17 சதவிகிதமாகவும், 2005ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாகவும் இருந்தது. 2018ஆம் ஆண்டில் 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோவாக இருந்து வருகிறது. பிறக்கும்போது 2.5 கிலோவுக்குக் குறைவாக உடல் எடை இருக்கும்போது, அக்குழந்தைகள் குறைந்த உடல் எடை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. எடை குறைவுடன் பிறந்த குழந்தைகள் மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். பொதுவாக, எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon