மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

கவிஞராகும் நடனப் புயல்!

கவிஞராகும் நடனப் புயல்!

பிரபுதேவா தான் நடிக்கும் புதிய படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரபுதேவா உடனடியாக நடிப்பு பக்கம் திரும்பினார். நடனத்தைப் போலவே நடிப்புப் பயணத்திலும் ஆரம்பத்தில் இருந்தே வரவேற்பு பெறத் தொடங்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, தமிழ்த் திரையுலகை கடந்து இந்தியத் திரையுலகம் முழுவதும் கவனம் பெறத் தொடங்கியபோது அவரது இசையில் பெரும்பாலான படங்களில் பிரபுதேவா நடிக்கத் தொடங்கினார். 90களின் இறுதியில் வெளியான படங்களில் இவர்கள் இருவரது கூட்டணி பல வெற்றிகளைப் பெற்றது.

நடனம், நடிப்பைக் கடந்து இயக்குநராகவும் பிரபுதேவா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார். இந்த நிலையில் தற்போது தான் நடிக்கும் யங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜூன் இயக்குகிறார். தங்கர் பச்சான், ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1970-80 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு படம் உருவாகி வருகிறது. அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

பிரபுதேவா எழுதியுள்ள பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon