மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

சூரியன் எனும் கொள்ளிக்கட்டை

"இந்த உலகம், உயிரினம் எல்லாம் எப்படி உருவாச்சுன்னு உனக்குத் தெரியுமா?" என்றது அதிசயத் தட்டு.

"அதுக்கும் நான் பார்க்குற நட்சத்திரங்களுக்கும் என்ன சம்மந்தம்?" என்றான் பரி.

"உனக்கு அந்த நட்சத்திரங்கள் பத்தின ரகசியம் தெரியணும்னா, உனக்கு தகுதி வேணும். இந்த பிரபஞ்சத்தோட ரகசியத்தை தெரிஞ்சுக்கிறதுதான் உனக்கான தகுதி."

"சரி, சொல்லு தெரிஞ்சுக்கிறேன். "

தட்டு பறக்க ஆரம்பிச்சது. இந்தப் பூமியை விட்டு வெளியே வந்தது. காத்து இல்லாத விண்வெளியில் பரியனுக்கான காற்றைத் தட்டு தந்துச்சு.

முதன்முதலா பூமியோட பிரமாண்டத்தைப் பார்த்து அசந்துட்டான் பரி. பூமியோட வட மேற்பரப்பை மட்டும்தான் பரியால பார்க்க முடிஞ்சது. ஏன்னா, பூமி அவ்வளவு பெரியது.

கொஞ்சம் கொஞ்சமா மேல பறக்க பறக்கதான் மொத்த பூமியும் தெரிஞ்சது. பூமியை விட்டு இன்னும் கொஞ்சம் விளக்கும்போதுதான் அந்த அதிசயத்தைப் பார்த்தான் பரி.

மிகப் பெரிய கொள்ளிக்கட்டை எரிஞ்சிட்டு இருந்த மாதிரி இருந்தது. பூமியைவிடப் பல மடங்கு பெரிய பந்து அது. சூரியனை இப்படிப் பக்கத்துல பார்ப்போம்னு பரி கற்பனை பண்ணிக்கூடப் பார்த்ததில்லை.

ஆனா, பரிக்கு ஓர் ஆச்சரியம். பூமியில இருக்கும்போது சூரியனைப் பார்த்தாலே கண்ணு கூசும். பூமிக்கு வெளிய இவ்வளவு பக்கத்துல பார்க்கும்போது ஏன் கண்ணு கூசலைன்னு ஆச்சர்யம். ஆனா, அதை அதிசயத் தட்டுகிட்ட கேக்கணும்னு தோணல.

ஏன்னா, இதைவிட மிகப் பெரிய அதிசயம் எல்லாம் காத்திருக்கு..!

- நரேஷ்

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon