மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

ஏற்றம் கண்ட வீடு விற்பனை!

ஏற்றம் கண்ட வீடு விற்பனை!

ஜூலை - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் வீடு விற்பனை 6 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான பிராப் ஈக்விட்டி, ஜூலை - செப்டம்பர் மாதங்களுக்கான இந்தியாவின் வீடு விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மூன்று மாதங்களில் 6 சதவிகித உயர்வுடன் மொத்தம் 51,142 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூரு, தானே, ஹைதராபாத், புனே, நொய்டா, குருகிராம், மும்பை, கொல்கத்தா ஆகிய ஒன்பது நகரங்களில் வீடு விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. இதே மாதங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் 12 சதவிகிதம் உயர்ந்து 32,870 ஆக இருந்துள்ளது.

பெங்களூருவில் மட்டும் 14 சதவிகித உயர்வுடன் மொத்தம் 8,916 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மும்பையில் 5,736 வீடுகளும், ஹைதராபாத்தில் 3,624 வீடுகளும், தானேவில் 11,210 வீடுகளும், நொய்டாவில் 920 வீடுகளும், குருகிராமில் 1,992 வீடுகளும், கொல்கத்தாவில் 3,058 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 70 சதவிகித உயர்வுடன் மொத்தம் 3,966 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் ஜூலை - செப்டம்பர் மாதங்களில் சுமார் 6,17,456 வீடுகள் விற்பனையாகாமல் எஞ்சியதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon