மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

இந்தியாவில் வளரும் கூகுள் நிறுவனம்!

இந்தியாவில் வளரும் கூகுள் நிறுவனம்!

கூகுள் இந்தியா நிறுவனத்தின் 2017-18 நிதியாண்டுக்கான வருவாய் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவிலும் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2017-18 நிதியாண்டில் முந்தைய மூன்று ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமான வளர்ச்சியை இந்தியாவில் பதிவுசெய்துள்ளது. அந்த ஆண்டில் கூகுள் இந்தியாவின் வருவாய் ரூ.9,337.7 கோடியாக இருந்துள்ளது. இது 2016-17 நிதியாண்டில் கிடைத்த ரூ.7,208.9 கோடி வருவாயை விட 33 சதவிகிதம் அதிகமாகும். இதே ஆண்டில் நிறுவனத்தின் லாபம் மட்டும் ரூ.407.2 கோடியாகும். இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங், மென்பொருள் சேவைகளை வழங்கி வந்தாலும், கூகுள் இந்தியாவின் மொத்த வருவாயில் சுமார் 69 சதவிகிதம் அளவு விளம்பரங்கள் வாயிலாகவே கிடைக்கிறது.

இந்தியாவின் டிஜிட்டல் விளம்பரச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் டிஜிட்டல் தொழில் துறையில் 80 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டிருப்பதாக மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தின் தலைவரான சாம் பல்சாரா, எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “டிஜிட்டல் விளம்பரத் துறையில் உலகின் வேறெந்த நாடுகளை விடவும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் 30 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் புரட்சிக்கு இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது” என்றார். டிஜிட்டல் விளம்பரச் சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு கூகுள் நிறுவனமும் இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நீட்சித்து வருகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon