மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 அக் 2019

மாணவர்களுக்காக ஒரு படம்!

மாணவர்களுக்காக ஒரு படம்!

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘எழுமின்’. விவேக். தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

“தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வசூலை குவிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்விடுகின்றன. குழந்தைகளுக்கான படங்கள் தமிழில் எடுக்கப்படுவது அரிதாகவே நிகழ்கிறது. அந்த வகையில்ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் எழுமின்” என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜி.

நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18ஆம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு கைதட்டல் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் கைதட்டல் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள்தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி.

மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள்தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார். 18ஆம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.

அதன்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது,“விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார். மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட” என்றார்.

சண்டக்கோழி, வட சென்னை என இரு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் எழுமின் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. ஓபனிங் என்பதும் இருக்காது. மாணவர்களுக்கான படம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எழுமின் படத்தின் கதையை கூறி, படத்தின் டிரெய்லர் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது படக்குழுவினரால்.

அதனால்பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் இப்படத்தை மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. டிக்கட்டில்ரூபாய் 15சலுகை வழங்கும் 30 லட்சம்அனுமதி கூப்பன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் எழுமின் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான விஜி.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon