மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

பேட்டிங் செயல்திறனை அளவிட கருவி!

பேட்டிங் செயல்திறனை அளவிட கருவி!

பேட்டிங் செயல்திறன் கண்காணிப்புக் கருவியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மைக்ரோசாஃப்ட் கார்பரேசன் மற்றும் ஸ்பெக்டாகோம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து இவர் பேட்டிங் செயல்திறன் கண்காணிப்புக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தக் கருவிக்கு பவர் பேட் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

விளையாட்டின் தரத்தை மேம்படுத்தவும், கிரிக்கெட் போட்டியை ஊக்கப்படுத்தவும் இந்த பவர் பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் சார்ந்த கருவிகளின் சேவைகளைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் அசூர் கிளவுட் தளத்தில் இந்த பவர் பேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசிட்டிங் கார்டு அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி பேட்டின் மேல்பகுதியில் ஒட்டப்படுகிறது. பேட்டிங் செய்யும்போது அதன் பல்வேறு விதமான துல்லியமான தகவல்களை சேகரித்து நமக்கு வழங்குகிறது. வேகம், திருப்பம் மற்றும் ஷாட்டின் தரம் போன்ற பல்வேறு அளவுறுக்களின் அடிப்படையில் தரவுகளை இந்த பவர் பேட்டில் பெறலாம்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில், “சுவாரசியமான வழிகளில் ரசிகர்களை ஊக்குவிக்க இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. மேலும், இந்தக் கருவிகள் ரியல்-டைம் விளையாட்டு ஆய்வுகளுக்கும் உதவுகின்றன. ஆட்டத்திற்கோ அல்லது வீரர்களுக்கோ தடை ஏற்படுத்தாமல் தொடரவும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon