மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சரவைக் கூட்டம்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சரவைக் கூட்டம்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மருத்துவமனையிலேயே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கோவா யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பாஜகவின் மனோகர் பாரிக்கர் உள்ளார். கணைய அழற்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இவர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கோவா, மும்பை என பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த மார்ச்சிலிருந்து ஜூன் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் சில நாட்கள் அரசு பணிகளை கவனித்து வந்தார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் மாநில நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் ஆட்சியமைக்க உரிமையும் கோரினர்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே அவர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரவாடி கோமண்டக் கட்சித் தலைவர் சுதின் தவாலிகர், கோவா முன்னணி கட்சித் தலைவர் விஜய் கோவா முன்னணி கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கோவிந்த், ரோகன், பிரசாத் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பாக பி.டி.ஐ. ஊடகத்திற்குப் பேட்டியளித்த பிரசாத், “அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon