மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

விக்கெட்டுகளைப் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ்!

விக்கெட்டுகளைப் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உணவு இடைவேளைக்கு முன்பு வரை 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 12) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு வரை 86 ரன்களுக்கு 3 மூன்று விக்கெட்டுகளை இழந்து அந்த அணி விளையாடி வருகிறது.

டாசில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து ஆடத் தொடங்கியது. அந்த அணியில் கீமோ பால் மற்றும் ஷெர்மன் லீவிஸ் ஆகியோருக்குப் பதிலாக ஜோமல் வாரிக்கன் மற்றும் ஜேசன் ஹோல்டெர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்களை விளாசி சிறப்பான தொடக்கத்தைக் கண்டது. இந்திய அணியில் அறிமுக வீரரான ஷர்துல் தாகூர் ஆட்டத்தின் 4ஆவது ஓவரிலேயே காயம்பட்டார். இதனால் அவருக்குப் பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார்.

11.1 ஓவர்களில் அந்த அணி 32 ரன்களை எடுத்திருந்த போது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. அஸ்வின் வீசிய அந்த பந்தினை கியரன் போவெல் எதிர்கொண்டு மிக எளிமையாக ஜடேஜாவின் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து 23 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் கிரெய்க் பிராத்வெய்ட் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி 52 ரன்களை எடுத்திருந்தது. உமேஷ் யாதவ் வீசிய 31.3 ஆவது ஓவரில் ஷாய் ஹோப்பும் எல்.பி.டபள்யூ முறையில் வெளியேறினார்.

ஒட்டுமொத்தமாக மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 33.1 ஓவர்களை எதிர்கொண்டு 86 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் ஷிம்ரோன் ஹெட்மயெர் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் அப்போது களத்தில் இருந்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon