மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

வேலை உருவாக்கம்: மோடி நம்பிக்கை!

வேலை உருவாக்கம்: மோடி நம்பிக்கை!

தொழில்நுட்பப் புரட்சியால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், வேலை உருவாக்கம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அது போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியாக இருப்பதாகவே கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசுக்கு எதிரான அதிர்வலைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் நான்காவது தொழில் புரட்சி காரணமாக இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். நான்காவது தொழில் புரட்சி மையத்தை டெல்லியில் அக்டோபர் 11ஆம் தேதி திறந்துவைத்த மோடி, நான்காம் தொழில் புரட்சியின் பயன்களை மக்கள் பெறுவதற்குத் தேவையான கொள்கை மாற்றங்களைத் தமது அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பு, வேகமாக வளரும் சந்தை வடிவமைப்பு, டிஜிட்டல் உள்கட்டுமான வசதிகள் போன்றவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சர்வதேச அளவில் இந்தியாவை மிகப் பெரிய மையமாக உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சிகள் நடந்தபோது இந்தியா சுதந்திரம் அடையாமல் இருந்தது. மூன்றாவது புரட்சியின் போது சுதந்திரம் அடைந்ததால் சில சவால்களைச் சந்தித்துக்கொண்டிருந்தோம். தற்போது செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிளாக் செயின் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் புதிய உச்சத்துக்குத் தொழில் துறையை இட்டுச் செல்கின்றன” என்று கூறினார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon