மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

தமிழக அரசுக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததில்லை!

தமிழக அரசுக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததில்லை!

தமிழக அரசுக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய திமுக தலைவர், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை வைத்தோம். உடனே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.. நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு 6 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் எழுதினார். ஆனால் ஆளுநர்’ விதிகளை மீறி, தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.

பொடா, தடாவைப் பார்த்தவர் கோபால். ஜெயலலிதாவையே எதிர்த்தவர். எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தா பயந்துவிட போகிறார். கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்துப் பயப்படுகின்றனர். கிண்டியில் இருப்பவரோ நிர்மலாதேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசோ, பாஜகவோ தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராகவும் இல்லை. கொடுத்ததும் இல்லை” என்று தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஜாமீன் வழங்காதது நீதிமன்றத்தின் முடிவு அதில் காவல் துறையையோ, அரசையோ கேள்விக்கு உள்ளாக்க முடியாது என்று தெரிவித்தார். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon