மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 அக் 2019

இந்தியில் விஷ்ணு விஷால்?

இந்தியில் விஷ்ணு விஷால்?

தான் நடித்துள்ள ராட்சசன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய இயக்குநரான ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் உள்ளிட்டோரை வைத்து உருவாக்கிய படம் ராட்சசன். சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல கவனத்தைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பட நாயகன் விஷ்ணுவே கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு ,அந்தத் தகவல்கள் உண்மைதான் எனக் கூறியதுடன் மட்டுமல்லாமல் இந்தி ரீமேக் உரிமையைப் படம் வெளியாகும் முன்பே தான் வாங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தி உரிமையை வாங்கினாலும் விஷ்ணுவே அதிலும் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் யாரையேனும் இந்தியில் நடிக்கவைப்பாரா என எதுவும் கூறவில்லை.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon