மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

வருமான வரி: ஜேட்லி நம்பிக்கை!

வருமான வரி: ஜேட்லி நம்பிக்கை!

மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 7.6 கோடியாக உயரும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுக் கணக்காளர்களுக்கான 29ஆவது கருத்தரங்கு டெல்லியில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி பேசுகையில், “நேரடி வரிகள் வாரியத்தின் செயல்பாடுகளை நாம் உற்று நோக்கினால் வரி வசூலில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடியும். வரி அமைப்பை ஒழுங்குபடுத்தியது, வரி விகிதத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ஒவ்வொரு ஆண்டும் வரி வசூல் 15 முதல் 20 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014ஆம் ஆண்டின் மே மாதம் நரேந்திர மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டில் 6.86 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் முடிவில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 7.6 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சி குறித்தும் அதில் செலவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் பொதுக் கணக்காய்வாளர் அமைப்பின் (CAG) முக்கியத்துவம் குறித்துப் பேசிய ஜேட்லி, “தனியார் துறை நிறுவனங்களுடன் போட்டியிட்டு இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் கணக்குகளைக் கவனமாகக் கையாள வேண்டும். 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுத் துறை நிறுவனங்களின் பணிச் சூழல் மாறியுள்ளது. அதேபோல, அரசு நிறுவனங்கள் தங்கள் துறைகளில் ஏகபோகத்தை அனுபவிக்கும் போது அவை அத்துறையில் உள்ள சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon