மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

ஐஸ்வர்யாவுடன் பிரேசில் மாடல்!

ஐஸ்வர்யாவுடன் பிரேசில் மாடல்!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நோட்டா வாயிலாகத் தமிழில் என்ட்ரி ஆன நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் அளவுக்கான கவனத்தை ரசிகர்களிடம் அந்தப்படம் பெற்றுத்தரவில்லை. தற்போது தனது அடுத்த கட்ட முயற்சியாக மல்லி மல்லி இதி தானி ரோஜு படம் வாயிலாகக் கவனம் ஈர்த்த இயக்குநர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கே.எஸ். ராமா ராவ் இதைத் தயாரிக்கிறார்.

கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற ‘இங்கெம் இங்கெம் இங்கெம் காவாலே’ எனும் பாடல் வாயிலாக தனித்த கவனத்தை ஈர்த்த கோபி சுந்தரே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதில் நடிக்கிறார். தெலுங்கிலிருந்து நோட்டா வாயிலாக இவர் தமிழுக்கு அறிமுகமானதுபோல இந்தப்படத்தில் நடிப்பதன் வாயிலாக தமிழிலிருந்து தெலுங்குக்கு அறிமுகமாகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இரு கதாநாயகிகள் இணைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது கதாநாயகியாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலான இஸபெல் லெயிட்டும் நடிக்கவுள்ளார். ஆமிர் கான் நடித்த தலாஷ்: தி ஆன்ஸர் லைஸ் வித்தின், சிக்ஸ்டீன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மூன்று கதாநாயகிகளுடன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் இப்பட படப்பிடிப்பானது அக்டோபர் 18ஆம் தேதி தசரா பண்டிகையையொட்டி துவங்கவுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon