ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில், மதியம் 1 மணி வரை மட்டுமே ப்ரீகேஜி வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவானது, தமிழக அரசுக்குச் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை வரை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் குழந்தைகளைச் சிறிது நேரம் தூங்க வைத்து, அதன்பின் பாடங்களைத் தொடர்ந்து நடத்தி மாலை 4 மணிக்குக் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இளம் வயதில் குழந்தைகள் மீது இவ்வாறு கல்விச் சுமையை ஏற்றுவது அவசியமற்றது என தமிழ்நாடு மாணவர்கள் ஆசிரியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இது குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.