மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

விஜய் மகன் அஜித் ரசிகரா?

விஜய் மகன் அஜித் ரசிகரா?

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்த சமூக வலைதள விவகாரத்தில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா எனும் மகளும் உள்ளனர். சஞ்சய்யைப் பொறுத்தவரை விஜய் நடித்த வேட்டைக்காரனில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடிவிட்டுப்போனார். விஜய் நடித்த தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் வந்துவிட்டுப் போனார் திவ்யா சாஷா. இப்படியாக பெரிய அளவிலான கதாபாத்திரங்களில் இருவருமே இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக “விஜய்யைத் தவிர்த்து தனது ஃபேவரிட் நடிகர்கள் அஜித், மற்றும் விஜய் சேதுபதிதான்” எனத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சஞ்சய் கூறியதாக சமூக வலைதளங்களில் சில பதிவுகள் உலா வந்தன. இந்த பதிவுகள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே புதிய விவாதங்களைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது பிஆர்ஓ ரியாஸ் கூறியுள்ள தகவல்.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பிஆர்ஓ ரியாஸ், “ விஜய் மகன் சஞ்சய் கூறியுள்ளதாக வெளியான இன்ஸ்டகிராம் பதிவுகளைக் கண்டோருக்கு ஒரு விளக்கம். விஜய்யின் மகன் சஞ்சயோ விஜய் மகள் திவ்யாவோ எந்தவிதமான சமூக வலைதளங்களிலுமே இல்லை. எனவே போலியான சமூக வலைதள பக்கங்களை நம்ப வேண்டாம் என தளபதி ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

இவரது இந்த விளக்கத்தால் சமூக வலைதளங்களில் ஏற்பட்டிருந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon