மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

பிக் பாஸ் நாயகிகளின் ட்ரெண்டிங் வீடியோ!

பிக்  பாஸ் நாயகிகளின் ட்ரெண்டிங் வீடியோ!

நடிகைகளான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து தோன்றும் வீடியோவொன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்ததன் வாயிலாக ஏற்கெனவே போதுமான அளவிற்கு பாப்புலர் ஆகிவிட்ட யாஷிகா ஆனந்த், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாகக் கவனத்தைப் பெற்றார்.

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தபோதும், ரசிகர்களிடம் பெரிய அளவிலான கவனத்தைப் பெற்றிடாத நடிகை ஐஸ்வர்யா, பிக் பாஸில் கலந்துகொண்டதன் பின்னர் திடீர் பாப்புலர் ஆனார். சொல்லப்போனால் பிக் பாஸின் இந்த சீஸனில் சர்ச்சைக்குரிய வகையிலாக ரசிகர்களிடம் அதிகக் கவனத்தைப் பெற்றவர் இவராகத்தான் இருப்பார்.

போட்டியாளர்களாக கலந்துகொண்ட யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் கோலியும் சதமும்போல பின்னிப் பிணைந்து நெருக்கமான தோழிகள் ஆனார்கள். யாஷிகா போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் ஐஸ்வர்யா மட்டுமே கடைசிவரை களத்தில் இருந்து இரண்டாம் இடம் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இயல்புக்குத் திரும்பியுள்ள இந்நிலையில்,யாஷிகா தற்போது வீடியோவொன்றைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தாங்கள் இந்தப் பாடலை சொந்தமாக கம்போஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, "நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு" என ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாடியும் உள்ளார்.

கறுப்பு நிற உடையில் யாஷிகாவும் சிவப்பு நிற உடையில் ஐஸ்வர்யாவும் தோன்றியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம்பெற்றுவருகிறது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சனி 13 அக் 2018