விளையாட்டுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் க்ஷியோமியின் பிளாக் ஷார்க் ஸ்மார்ட் போன் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது.
சீனாவின் பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி விளையாட்டுக்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கும் பிளாக் ஷார்க் மாடல் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ரேஷர் போன் விளையாட்டுக்கான பிரத்தியேக ஸ்மார்ட் போனாகும். இந்த மாடலுக்கு போட்டியாக சீனாவின் க்ஷியோமி தனது பிளாக் ஷார்க் மாடலை அறிமுகப்படுத்துகிறது.
இந்த மொபைலின் சிறப்பம்சங்கள்:
5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.
4000 எம்.ஏ.ஹெச்.பேட்டரி
8ஜிபி ரேம்
குயால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசசர்
திரவ குளிர்ச்சி தொழில்நுட்ப வசதிகள்
சென்சார் வசதிகொண்ட 20 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
20 மெகா பிக்சல் முன்பக்க கேமரா
64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள்
இந்த மொபைல் போன் சந்தைக்கு விரைவில் அறிமுகமாவதை க்ஷியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க்.காம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மொபைல் போன் விளையாட்டு பிரியர்களிடையே இந்த மொபைல் போன் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.