மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

மொபைல் உற்பத்திக்கு புதிய கொள்கை!

மொபைல் உற்பத்திக்கு புதிய கொள்கை!

மத்திய அரசின் புதிய மின்னணுக் கொள்கையானது மொபைல் போன் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தும் விதமாக உள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது மின்னணு பொருட்கள் கொள்கை வரைவை அக்டோபர் 10ஆம் தேதியன்று வெளியிட்டது. இந்தக் கொள்கை வரைவில், 2025ஆம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் உற்பத்தியில் மொபைல் போன்களின் பங்கு மட்டும் நான்கில் மூன்று பங்காக இருக்க வேண்டும் என்று இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்தக் கொள்கை விரும்புகிறது.

மொபைல் போன் உற்பத்தியை 2019ஆம் ஆண்டில் 50 கோடி யூனிட்டுகளிலிருந்து 2025ஆம் ஆண்டில் 100 கோடி யூனிட்டுகளாக உயர்த்துவதற்கு இந்தக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 100 கோடி யூனிட்டுகளின் மதிப்பு 190 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 110 பில்லியன் டாலர் (ரூ.7 லட்சம் கோடி) மதிப்பிலான 600 மில்லியன் யூனிட்டுகள் ஏற்றுமதி செய்வதற்காக ஒதுக்கப்பட வேண்டுமென்று இக்கொள்கை வலியுறுத்துகிறது. மின்னணு பொருட்கள், செமி கண்டக்டர்கள், ராணுவத்துக்குத் தேவையான மின்னணு சாதனங்கள், வாகனங்களுக்குத் தேவையான பொருட்கள், தொழிற்துறை பொருட்கள் என அனைத்து விதமான கருவிகளையும் உற்பத்தி செய்வதற்கு இந்தக் கொள்கை முன்மொழிகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon