மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் மனு தள்ளுபடி!

போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் மனு தள்ளுபடி!

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில வாக்காளர் பட்டியலில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28ஆம் தேதியன்றும், ராஜஸ்தானில் டிசம்பர் 2ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை முறையாகச் சரிசெய்த பிறகு நியாயமாக தேர்தல்களை நடத்த வேண்டும். எனவே குறைபாடுகள் இன்றி நியாயமாகத் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மேலும், வாக்காளர் பட்டியல் பிடிஎஃப் வடிவில் வெளியிடாமல், விதிமுறைகள் படி உரை வடிவிலேயே வெளியிட வேண்டும். தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனை நடத்த வேண்டும். என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனர். மத்திய பிரதேசத்தில் 60 லட்சம், ராஜஸ்தானில் 41 லட்சம் போலி வாக்காளர் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக,ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே, ராஜஸ்தானில், 71 லட்சம் புதிய வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய குறைபாடுகளை சரி செய்த பின்னர் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று (அக்டோபர் 12) விசாரித்த நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon