மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

சென்னை: 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

சென்னை: 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

சென்னை முழுவதும் உள்ள 26 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், நேற்று (அக்டோபர் 12) அறிக்கையொன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சென்னை மாநகரம் முழுவதுமுள்ள 16 காவல் ஆய்வாளர்களின் பணியிட மாற்றத் தகவல்கள் இடம்பெற்றன.

இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனந்தஜோதி கானாத்தூர் சட்ட ஒழுங்குப் பிரிவுக்கும், சிட்லப்பாக்கம் குற்றப் பிரிவில் இருந்த கிருஷ்ணா சிட்லப்பாக்கம் சட்ட ஒழுங்குப் பிரிவுக்கும், நொளம்பூர் சட்ட ஒழுங்குப் பிரிவில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், ராயலா நகர் சட்டம் ஒழுங்குப் பிரிவில் இருந்த சுப்பிரமணியன் வளசரவாக்கம் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், வடபழனி குற்றப் பிரிவில் இருந்த பசுபதி அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், கே.கே.நகர் குற்றப் பிரிவில் இருந்த தங்கராஜ் அண்ணாசாலை சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், ஆவடி குற்றப் பிரிவில் இருந்த முருகேசன் ஆவடி சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அசோக்குமார் டி.பி. சத்திரம் சட்ட ஒழுங்குப் பிரிவுக்கும், வண்ணாரப்பேட்டை குற்றப் பிரிவில் இருந்த சங்கர் கோடை சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், மத்திய குற்றப் பிரிவில் இருந்த ஆனந்த் கொருக்குப்பேட்டை சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், கொத்தவால்சாவடி குற்றப் பிரிவில் இருந்த கணேசன் உயர் நீதிமன்றத்துக்கும், வியாசர்பாடி சட்டம் ஒழுங்குப் பிரிவில் இருந்த மோகன்ராஜ் மாம்பலம் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த மல்லிகா தலைமை செயலகத்திற்கும், கானாத்தூர் குற்றப் பிரிவில் இருந்த கவுதமன் ராயலா நகர் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், அண்ணாசாலை சட்டம் ஒழுங்குப் பிரிவில் இருந்த சிவக்குமார் பெரியார் – அண்ணா - எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், மாம்பலம் சட்டம் ஒழுங்குப் பிரிவில் இருந்த பிரபு வியாசர்பாடி சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், பழவந்தாங்கல் குற்றப் பிரிவில் இருந்த ரத்தினவேல் பாண்டியன் ஏழுகிணறு சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சத்தியலிங்கம் நொளம்பூர் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுராதா புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தண்டையார்பேட்டை குற்றப் பிரிவில் இருந்த ஜெயலட்சுமி எம்கேபி நகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பரணி பெரவள்ளூர் குற்றப் பிரிவுக்கும், மார்டன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கவுரி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கொருக்குப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த முருகேசன் மாங்காடு குற்றப் பிரிவுக்கும், பெரியார் – அண்ணா -எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்த இளங்கோ காத்திருப்போர் பட்டியலுக்கும், மாங்காடு குற்றப் பிரிவில் இருந்த சிதம்பரபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கும், தலைமைச்செயலகத்தில் இருந்த விஜயராமலு காத்திருப்போர் பட்டியலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon