மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

பெட்ரோல் விலை குறையுமா?

பெட்ரோல் விலை குறையுமா?

எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மீண்டும் மானியம் வழங்க வேண்டிய தேவை இருக்காது என்று மத்திய நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான விலையில் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் மானியம் வழங்குமாறு எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களை மத்திய அரசு அண்மையில் கேட்டுக்கொண்டது. ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் அரசின் அறிவுறுத்தலால் மேலும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. எனினும், மானியத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசு தனது லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ள எவ்விதத் திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையின் தாக்கத்தை மேலும் குறைப்பதற்கு மேலும் மானியம் வழங்கும்படி எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்துமா எனப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்வியெழுப்பப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் மானியம் வழங்குவதற்கு ஒருமுறை மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மானியம் வழங்கும்படி கேட்பதற்கு அரசுக்கு எண்ணமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon