மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

தனியார் மோட்டார் நிறுவனத்துக்கு உத்தரவு!

தனியார் மோட்டார் நிறுவனத்துக்கு உத்தரவு!

தொழிலாளர்களுக்கு எதிராக யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழகத் தொழிலாளர் நலத் துறையும், யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது. “ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் யமஹா நிறுவனத்தில் 814 நிரந்தரப் பணியாளர்கள், 2,500 பயிற்சி பெறுபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 350 பிற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிற மோட்டார் வாகன நிறுவன ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில், யமஹா நிறுவன ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தரையைத் துடைப்பது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலும் ஊழியர்களை ஈடுபடுத்துகின்றனர்.

சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கத்தின் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களைக் காரணமின்றி பணி நீக்கம் செய்துள்ளது யமஹா. இவ்வாறு பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று தொழிலாளர் நல இணை ஆணையர் தெரிவித்தும், அதை அந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. அதனால், தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனம் ஈடுபடுவதையும், புதிய ஆட்களை நியமிப்பதையும் தடுக்க வேண்டும். தொழிலாளர் நல இணை ஆணையர் அக்டோபர் 3ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவின்படி சுமூகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 13) நீதிபதி எஸ்.விமலா முன்பு நடந்தது. அப்போது, இந்த மனு குறித்து தமிழகத் தொழிலாளர் நலத் துறை மற்றும் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon