மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

புதுக்கோட்டை கிளைச்சிறையில் ஆய்வு!

புதுக்கோட்டை கிளைச்சிறையில் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்ட கிளைச்சிறை மற்றும் சிறார் பள்ளியில் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று (அக்டோபர் 13) ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த மாதம் சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்புச் சிறப்புப் பிரிவில் அடைக்கப்பட்ட கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிறைத் துறை உயர் அதிகாரிகள் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர், அங்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட டிவிகள், ரேடியோக்கள் போன்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்துச் சிறைகளிலும் அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த ருக்மணி புதுக்கோட்டை மாவட்ட கிளைச்சிறை மற்றும் சிறார் பள்ளியின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கிளைச்சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என இன்று சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை சிறையில் 50க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 100க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், கைதிகளிடம் இருந்து எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon