மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 20 நவ 2019

‘நாயகி’யின் அடுத்த ஆட்டம்!

‘நாயகி’யின் அடுத்த ஆட்டம்!

விஜயலக்‌ஷ்மி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகம் ஆன விஜயலக்‌ஷ்மி அதன் பின்னர் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்துக் கவனம்பெற்றார். அதன்பின்னர் சில படங்களில் நடித்தபோதும் பெரிய அளவிலான வெற்றிகளை அப்படங்கள் பெறவில்லை.

அதன் பின்னர் ‘நாயகி’ எனும் டிவி சீரியலில் நடித்துவந்த அவர், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீஸனின் பாதியில் வந்து திடீர் போட்டியாளராகக் கலந்துகொண்டார். பாதியில் வந்ததைப்போலவே பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் பிக் பாஸ் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் புதுக்கவனத்தையும் பெறத் தவறவில்லை.

பிக் பாஸ் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக எந்தப் படத்தில் அவர் நடிப்பார் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஜயலக்‌ஷ்மி. அதில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் தனது ஃபேவரிட் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon