மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மலையேற்றத்துக்கான புதிய விதிகள் அறிவிப்பு!

மலையேற்றத்துக்கான புதிய விதிகள் அறிவிப்பு!

குரங்கணி தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மலையேற்றத்துக்கான புதிய ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது.

சமீப காலமாகத் தமிழகத்தில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் அதிகளவில் உள்ளது. வனத் துறையினர் அனுமதி பெற்றும் பெறாமலும், பலர் இப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மார்ச் 11ஆம்தேதியன்று தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்அட்டது. இதில், மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர்; அதில் 22 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தமிழக அரசின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மலையேற்றம் தொடர்பான புதிய விதிகளையும், கட்டண அறிவிப்பையும் வெளியிட்டார் தமிழக வனத் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர். “வனத் துறையில் பதிவு செய்யாத நிறுவனம், மலையேற்றப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யமுடியாது. வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவருடன்தான் கடினப் பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். வனத் துறையில் பதிவு செய்யாத எந்த நிறுவனம், சங்கம், அமைப்பு இப்பயிற்சிக்கான ஏற்பாடு செய்ய இயலாது. இனி மலையேற்றம் மேற்கொள்ள விரும்புவோர் வன அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்” என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், மலையேற்றப் பாதைகளை மூன்றாகப் பிரித்துள்ளது தமிழக அரசு. எளிதான பாதை, மிதமான பாதை மற்றும் கடினமான பாதை என்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலையேறும்போது ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon