மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்திய தூதரகத்தில் சமஸ்கிருத, இந்தி வகுப்புகள்!

இந்திய தூதரகத்தில் சமஸ்கிருத, இந்தி வகுப்புகள்!

ஐ.நா. சபையில் இந்தியில் பேசுவது, வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களில் இந்தியில் பேசுவது என்று பிரதமர் மோடி இந்தி மொழியை ஊக்குவித்து வருகிறார். அதேபோல சமஸ்கிருத மொழியையும் பரப்புவதற்கு மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தி, சமஸ்கிருத மொழிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கும் வகையில் வாராந்திர வகுப்புகளை நடத்த இருக்கிறார்கள்.

இதுகுறித்து வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதகரம் இன்று (அக்டோபர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி, சமஸ்கிருத மொழிகளைப் பரப்பும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் நடைபெறும். தூதரகத்தில் பணியாற்றும் இந்திய கலாச்சாரத்துறை ஆசிரியர் முனைவர். மாக்ஸ் ராஜ் கற்பிப்பார்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்தி வகுப்புகளும், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை சமஸ்கிருத வகுப்புகளும் நடைபெறும். இந்த வகுப்புகள் அனைத்தும் தூதரக வளாகத்துக்குள் நடக்கும். எப்போது முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்” என்று இந்திய தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon