மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

உயரும் முட்டை உற்பத்தி!

உயரும் முட்டை உற்பத்தி!

இந்தியாவின் முட்டை உற்பத்தி ஆண்டுக்கு 100 பில்லியனாக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 12 உலக முட்டை தினத்தை முன்னிட்டு டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய வேளாண் துறை இணையமைச்சரான பர்ஷோத்தம் ரூபலா பேசுகையில், “இந்தியாவின் கோழிப் பண்ணைத் துறை சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு இத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. இந்திய விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு கோழிப் பண்ணைத் துறை பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு பல்வேறு வேலைவாய்ப்புகளையும் இத்துறை உருவாக்கித் தருகிறது. கோழிப் பண்ணைத் தொழிலுக்கு மிகப் பெரிய முதலீடுகள் தேவையில்லை என்பதால் சிறு விவசாயிகளும் இதில் பயன்பெற முடியும்” என்றார்.

மற்றொரு வேளாண் துறை இணையமைச்சரான கிருஷ்ண ராஜ் பேசுகையில், “முட்டைகள் மிகவும் சுத்தமானவை மற்றும் ஆரோக்கியமானவை. இந்தியாவின் கோழிப் பண்ணைத் துறையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 90 பில்லியன் முட்டைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை கூடிய விரைவில் 100 பில்லியனாக உயரும். இத்துறை ஆண்டுக்கு 6 சதவிகித வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இத்துறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. முட்டை நுகர்வைப் பொறுத்தவரையில் ஆண்டு ஒன்றுக்கு நபர் ஒருவருக்குச் சராசரியாக 70 முட்டைகள் கிடைக்கப் பெறுகின்றன” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon