மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

குத்தகை அலுவலகங்கள்: உயரும் தேவை!

குத்தகை அலுவலகங்கள்: உயரும் தேவை!

அலுவலக இடங்களின் குத்தகை கடந்த ஆண்டைக் காட்டிலும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் மட்டும் குத்தகைக்குச் செல்லும் அலுவலகங்களின் மொத்தப் பரப்பளவு 32.2 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. கார்பரேட் நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் போன்றவை தங்களது இடத்தை விரிவு செய்துகொள்ள விரும்புவதால் அலுவலக இடங்களுக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளது என்று சொத்து ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை வழங்கும் தகவல்களின்படி, முந்தைய ஆண்டில் அலுவலக இட குத்தகை பரப்பளவு 30.1 மில்லியன் சதுர அடியாக இருந்துள்ளது.

எனினும், தேவை மிக அதிகமாக இருந்ததாலும், அலுவலக இட விநியோகம் அதிகரித்துள்ளதாலும் 2018ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் குத்தகை பரப்பளவு 25 விழுக்காடு உயர்ந்து 23 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி ஆகிய ஒன்பது நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2018 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அலுவலக இட குத்தகை 3 விழுக்காடு உயர்ந்து 10.9 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon