மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிலைகள் மாயம்: அதிகாரி வீட்டில் சோதனை!

சிலைகள் மாயம்: அதிகாரி வீட்டில் சோதனை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக, இன்று (அக்டோபர் 13) அறநிலையத் துறை கூடுதல் இணை ஆணையர் திருமகள் வீட்டில் சோதனை நடத்தினர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, கோயிலில் இருந்த புன்னைவன நாதர், ராகு, கேது ஆகிய மூன்று சிலைகள் மாற்றப்பட்டுப் புதிய சிலைகள் நிறுவப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது அறநிலையத் துறை கூடுதல் இணை ஆணையராக இருக்கும் திருமகளிடம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், இவர் அக்கோயிலில் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக, வியாசர்பாடியில் உள்ள திருமகள் வீட்டில் அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon