மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

பதக்கங்களை அள்ளும் இந்தியா!

பதக்கங்களை அள்ளும் இந்தியா!

ஜகர்தாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதுவரையில் இந்தியா 72 பதக்கங்களைக் குவித்துள்ளது.

மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. முந்தைய இரண்டு தொடர்களைக் காட்டிலும் இந்தத் தொடரில் இந்தியா கூடுதலான பதக்கங்களைக் குவித்து வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரையில் இந்திய வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளனர்.

179 தங்கம், 88 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. 53 தங்கம், 25 வெள்ளி மற்றும் 47 வெண்கலப் பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாவது இடத்திலும், 51 தங்கம், 42 வெள்ளி மற்றும் 43 வெண்கலப் பதக்கங்களுடன் ஈரான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2014ஆம் ஆண்டில் 3 தங்கம், 14 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என மொத்தமாக 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon