மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 20 பிப் 2020

பெண் போலீசார் பைக் ரோந்துப்படை!

பெண் போலீசார் பைக் ரோந்துப்படை!

சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க டெல்லியிலும் ராஜஸ்தானிலும் பெண் போலீசாரின் இருசக்கர ரோந்துப் படை அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 13 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார். நாளொன்றுக்கு ஆறு பெண்கள் கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 69 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு மணப்பெண் கொல்லப்படுகிறார். இப்படி இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதைவிட பட்டபகலிலேயே பெண்கள் தனியே நடந்து செல்ல முடியாதபடி அவர்களை ஈவ் டீசிங் செய்வது, பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது என நாள்தோறும் வன்முறைகள் அதிகமான நடந்துகொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பதற்கு டெல்லியிலும் ராஜஸ்தானிலும் இருசக்கர வாகன பெண் போலீசார் ரோந்து படை அமைக்கப்பட்டுள்ளது.

2017இல் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் பெண் போலீசார் ரோந்துப் படை தொடங்கப்பட்டது. இந்த ரோந்துப் படையினருக்கு நீலக்கலர் சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களாகத் துப்பாக்கியும், பெப்பர் ஸ்பிரேயும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பேருந்து நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பூங்காக்களிலும் இருசக்கர வாகனங்களில் ரோந்து வருகிறார்கள். இவ்விடங்களில் பெண்களுக்கு எந்தப் பிரச்சினை நடந்தாலும் உடனடியாக அங்கு சென்று குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். இந்தத் திட்டமானது பரவலான முறையில் வரவேற்கப்பட்டு வருகிறது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அந்த மாநில மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 19 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon