மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

நக்சல் வன்முறையைக் கைவிடும்: மாயாவதி

நக்சல் வன்முறையைக் கைவிடும்: மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் நக்சல் அமைப்பு வன்முறைகளைக் கைவிட்டு, சரியான பாதையில் போராடத் தொடங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு சுற்றுகளாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப் பிரதேசம் முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று (நவம்பர் 4) அகலாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “இன்றைய நாள் வரை பல்வேறு கட்சிகள் இங்கு ஆட்சி செய்திருக்கிறது. ஆனால், அவர்களில் யாரும் ஏழை, எளிய மற்றும் தலித் மக்களின் வளர்ச்சிக்காகப் போதிய அளவு ஏதும் செய்யவில்லை. என்னுடைய கட்சி பெரும்பான்மையான இடங்கள் பெற்றால், அனைத்து மக்களும் பயன்பெறுவர். குறிப்பாக தலித், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்கள் நிச்சயமாகப் பயன் பெறுவார்கள். சமூகத்தில் அவர்களுடைய நிலை உயர்த்தப்படும். குறிப்பாக நக்சல் இயக்கங்களும் வன்முறைகளை விடுத்து, சரியான பாதைக்குத் திரும்புவார்கள்.

இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை வெற்றிபெற வைத்தால் அம்பேத்கரின் அனைத்துக் கனவுகளையும் விரைவாக நிறைவேற்றுவோம். மேலும், எங்கள் கட்சி பகலும் இரவுமாக உழைத்து மக்களுக்கு உதவியையும், நிவாரணத்தையும் வழங்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த எந்த ஓர் ஆக்கபூர்வமான முயற்சியையும் எடுக்கவில்லை.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 5 நவ 2018