மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

செயல்படா சொத்துகளை விற்கும் எஸ்பிஐ!

செயல்படா சொத்துகளை விற்கும் எஸ்பிஐ!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, செயல்படா சொத்துகளை விற்பனை செய்து அதன் வாயிலாக ரூ.1,019 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), செயல்படா சொத்துகளை அதிகமாகக் கொண்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி 11 செயல்படா சொத்துகளைக் கொண்ட வங்கிக் கணக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான விற்பனை நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. வங்கியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த செயல்படா சொத்துகளைக் கொண்ட வங்கிக் கணக்குகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேற்கூறிய 11 செயல்படா வங்கிக் கணக்குகளில் அதிகபட்சமாக ஜான்கி கார்ப் லிமிடெட் நிறுவனம் மட்டும் ரூ.592.53 கோடியை வாராக் கடனாகக் கொண்டுள்ளது.

வீனஸ் ரெமிடீஸ் லிமிடெட் (ரூ.83.01 கோடி), எஸ்.பி.எஸ். டிரான்ஸ்போல் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.63.36 கோடி), ஆர்.எஸ். லூத் எஜுகேஷன் டிரஸ்ட் (ரூ.60.62 கோடி), நிலசல் அயர்ன் & பவர் லிமிடெட் (ரூ.52.41 கோடி), ஸ்ரீ பால்முகுந்த் பாலிபிளாஸ்ட் (ரூ.50.12 கோடி) ஆகிய நிறுவனங்களும் அதிகளவு வாராக் கடன்களைக் கொண்டுள்ளன. இக்கணக்குகளை விற்பனை செய்து அதன் வாயிலாக ரூ.1,019 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சொத்து மேலாண்மை மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விற்பனையில் கலந்துகொள்ளலாம் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon