மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சி!

ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சி!

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி, சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை - செப்டம்பரில் மொத்தம் 355 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டு விற்பனையை விட 6 சதவிகிதம் குறைவாகும். ஸ்மார்ட்போன் விற்பனை 2019ஆம் ஆண்டில் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்ட்ரேடெஜி அனலிஸ்டிக்ஸ் நிறுவனம் நடத்திய மற்றுமோர் ஆய்வில் இக்காலாண்டில் 360 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை - செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 46.9 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. ஐபோன்களின் விலையை உயர்த்துவதில் ஆப்பிள் அதிகக் கவனம் செலுத்தி வருவதால் அதன் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை. 20 சதவிகித விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சாம்சங் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹூவே நிறுவனம் 14 சதவிகித வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் (13%) உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே சீனாவின் க்ஷியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் இருக்கின்றன.

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon