மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ஐஸ்வர்யா பதிலால் குஷியான 'விஜய் ஆர்மி'!

ஐஸ்வர்யா பதிலால் குஷியான 'விஜய் ஆர்மி'!

சர்கார் படத்திற்கு தனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் வெளியான வடசென்னையில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள கனா படத்தின் அடுத்த மாத வெளியீட்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

பிரபலங்கள் வழக்கமாகவே தமது ட்விட்டர் பக்கங்களில் கேள்வி பதில்கள் போல தனது ஃபாலோயர்களுடன் சில நேரம் உரையாடுவது உண்டு. அந்த வகையில் இவரும் 'ஆஸ்க் ஐஸு' எனும் ஹேஸ்டேக்கில் நேற்று (நவம்பர் 4) பதில் அளித்தார்.

அதில், பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்ன அவர், நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட சிலரின் கேள்விகளுக்கும் தொடர்ச்சியாக பதில் அளித்தார். அந்தவகையில் "உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?" எனும் கேள்விக்கு ''தளபதி விஜய்'' என உடனடியாகப் பதில் கூறினார் ஐஸு. அதுபோல தனக்கு பிடித்த நடிகையாக சிம்ரனைக் கூறியுள்ளார்.

விஜய்யுடன் இணைந்து எப்போது நடிப்பீர்கள் எனும் கேள்விக்கு அவருடன் நடிக்கவே விரும்புகிறேன். ஆனால், தனக்கு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை விஜய்யை சந்தித்தால் என்னுடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்றுதான் முதலில் கேட்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், சர்கார் படத்திற்கு எப்போது போகிறீர்கள் எனும் கேள்விக்கு, தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த பதில்தான் இப்போது இணையத்தில்

பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் சர்காருக்கு சினிமாத்துறையில் உள்ள ஐஸ்வர்யாவுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. அந்தளவுக்கு சர்கார் ரசிகர்களிடம் ஆக்கிரமித்திருக்கிறது எனக்கூறி குறிப்பிட்ட அந்தப் பதிலை மட்டும் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துவருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் பலர் கொண்டாட்டமாகியுள்ளனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது